Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அடுத்தது அச்சுறுத்தல் போராட்டம்’ - 'நீட்'டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

'அனிதா மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘மாணவி அனிதா தற்கொலைசெய்துகொண்டிருந்தாலும், அது நீட்டால் நடந்த கொலையே. அனிதா மரணத்துக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் விலக்கு பெறுவதில் தமிழக அரசு காட்டிய அலட்சியப் போக்கும் அனிதாவின் மரணத்துக்கு முக்கியக் காரணம்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த உறுதிமொழி என்னவாயிற்று? தமிழகத்தில் நடைபெறுவது அ.தி.மு.க ஆட்சியில்லை; பா.ஜ.க. ஆட்சி. அடுத்தகட்ட போராட்டம் அரசுக்கு அச்சுறுத்தலான போராட்டமாக நடக்கும். நீட் தேர்வுக்கென பிரத்யேகமாக பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று செய்திகள் வருகின்றன. அந்தப் பயிற்சி மையங்களில் பயில 3 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்?. ஏழைகளால் இந்தக் கட்டணத்தை எப்படி கட்ட முடியும். ஒரு சில பயிற்சி மையங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு, தமிழக அரசு செயல்பட்டுவருகிறது. நீட் தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டபோது, அதை முதன்முதலில் எதிர்த்தவர் தி.மு.க தலைவர் கருணாநிதிதான். அவர் தொடர்ந்த வழக்கில்தான், நீட்டை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, நீட் ரத்துக்காக மட்டும் நடைபெறும் போராட்டமல்ல; மக்கள் பிரச்னைகள் அனைத்துக்குமான போராட்டம்’ என்று பேசினார்.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close