Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸ்அப் நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார் பிரையன் ஆக்டன்!

வாட்ஸ்அப் நிறுவனத்திலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன். 

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவரான பிரையன் ஆக்டன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஜேன் கோம் ஆகிய இருவரும் இணைந்து, 2009-ம் ஆண்டு உருவாக்கிய சேவைதான், வாட்ஸ்அப். இதை, 2014-ம் ஆண்டு, 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம். தற்போது, வாட்ஸ்அப் முழுவதுமாக ஃபேஸ்புக்கிற்குக் கீழ்தான் இயங்கிவருகிறது. 

பிரையன் ஆக்டன்

தற்போது, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற இருப்பதாக ஃபேஸ்புக்கில் அறிவித்திருக்கிறார், வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன். லாப நோக்கமற்ற தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த நிறுவனம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த முடிவுகுறித்து ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கும் பிரையன் ஆக்டன், "இந்த வயதில் நிறைய ரிஸ்க் எடுப்பதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்தான். எனவே, என்னுடைய லட்சியங்களை நோக்கி நகர்கிறேன். தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதுதான் என் திட்டம். இதுகுறித்து வருங்காலங்களில் விரிவாகக் கூறுகிறேன்

நிச்சயம், இது ஒரு கடினமான முடிவுதான். வாட்ஸ்அப் மற்றும் என்னுடைய டீம், கடந்த காலங்களில் செய்த சாதனைகளை எண்ணி பெருமைப்படுகிறேன். பலரும், தற்போது வாட்ஸ்அப்பை தினந்தோறும் சார்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close