Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெரியகுளத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி உருவபொம்மை எரிப்பு!

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும், பன்னீர்செல்வம், எடப்பாடியின் உருவ பொம்மைகள் எரிப்பும் நடைபெற்றது.

பெரியகுளம் மெயின் ரோட்டில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடியின் உருவ பொம்மையை எடுத்துவந்து எரித்தனர்.

கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதைக் கண்ட பன்னீர்செல்வம் தரப்பினர் டி.டி.வி. தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சற்று நேரத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களைக் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், போடியில் தேவர் சிலை அருகேயும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவங்களால் தேனி நேரு சிலை அருகிலும், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகேயும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close