Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்பன் பாலத்தில் 100-வது விபத்து! : கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்

பாம்பன் பாலம் ரப்பர் சாலையில் தொடர் விபத்து நடந்து வருவதைக் குறிக்கும் வகையிலும், வாகன  ஓட்டிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பாம்பன் இளைஞர்கள் கேக் வெட்டி மத்திய  மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பாம்பன் பாலம் பஸ் விபத்து

கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.2.70 கோடி செலவில் தார், சுண்ணாம்பு, குவாரி டஸ்ட் ஆகியவற்றைக் கொண்டு ரப்பர் சாலை அமைத்தனர். இந்த ரப்பர் சாலை வழுவழுப்பு தன்மையுடன் இருந்ததால் பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலும், பிரேக் கிரிப் இல்லாததாலும் வாகனங்களை இயக்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த ரப்பர் சாலை அமைக்கப்பட்ட குறுகிய நாள்களில் தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வருகின்றன. கடலின் மேல் அமைக்கப்பட்ட பாலத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் திடீரென வேகத்தை குறைக்கும்போது, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் முட்டி மோதும் விபத்துகள் அன்றாட நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. இதில் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் இல்லாவிடினும், ஒன்றிரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய விபத்தை ஏற்படுத்தும் பாம்பன் பால ரப்பர் சாலை குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று இரவு ஈரோட்டில் இருந்து வந்த பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தில் விபத்துக்குள்ளானது. மீண்டும் இன்று காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. 

pamban

பாலத்தில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துகளை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தொடர்ச்சியாக 100 விபத்தை ஏற்படுத்திய ரப்பர் சாலையை அகற்றிவிட்டுத் தரமான முறையில் விபத்தில்லா சாலையை அமைக்க வலியுறுத்தியும், பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும், குறைந்த வேகத்திலும் செல்ல வலியுறுத்தியும் பாம்பன் பகுதி இளைஞர்கள் பாரம்பர்ய மீனவர் சங்க நிர்வாகி சின்னதம்பி  தலைமையில் இன்று விபத்து நடந்த இடத்தில் கேக் வெட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close