Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சமைத்து சாப்பிட்டு உள்ளிருப்புப் போராட்டம் 

ஜாக்டோ- ஜியோ போராட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு எந்த ரியாக்ஷனும் இல்லாத சூழலில், இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

ஜாக்டோஜியோ

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிருப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்த இடத்தைவிட்டு எங்கும் நகராமல் தொடர்ந்து தங்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசி வருகிறார்கள். போராட்டத்தினர் சோர்ந்து விடாமல் இருக்க பாடல்களும் பாடப்படுகிறது. வந்திருந்த அனைவருக்கும் அங்கேயே உணவு தயார் செய்யப்பட்டது. ஆசிரியர்கள், அலுவலர்களே சமையல் வேலைகளைச் செய்தனர். தக்காளி மற்றும் எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டது. அனைவரும் வரிசையில் நின்று உணவு பெற்றுச் சென்றனர். உணவு அருந்திவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று இரவும் அங்கேயே போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். காவல்துறையினர் மாலையில் இவர்களை அப்புறப்படுத்த முயற்சிப்பார்கள் அல்லது கைதுசெய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜாக்டோ ஜியோ போராட்டம் தீவிரமாகிக்கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close