Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீட்' இருந்திருந்தால் கிருஷ்ணசாமி, தமிழிசை நிலை இப்படித்தான்! ஆர்ப்பாட்டத்தில் கொதித்த மாணவர்கள்

நீட் தேர்வு

நீட் தேர்வு இருந்திருந்தால், கிருஷ்ணசாமியும், தமிழிசையும் என்னவாகி இருந்திருப்பார்கள் என்று திருச்சியில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த 8-ம் தேதி திருச்சியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் நடந்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டத்தில், 13-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அடுத்த அண்ணாசிலை அருகில், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான கே.என். நேரு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாநகர் தலைவர்கள் கலைச்செல்வன், ஜவஹர், கோவிந்தராஜன், ஜெரோம் ஆரோக்கியராஜ், சி.பி.எம் நிர்வாகிகள், ஶ்ரீதர், ராஜா, ஜெயசீலன், சி.பி.ஐ நிர்வாகிகள் இந்திரஜித்,சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கே.என்.அருள் ஆகியோர் முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அதிகம் பேசாமல், மாணவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள், டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றார். நீட் தேர்வு போன்ற தேர்வுகள் இருந்திருந்தால், அவர், இந்தக் கூட்டத்தின் ஏதாவது ஒரு மூலையில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்துகொண்டிருந்திருப்பார். அதேபோல்தான் தமிழிசை சவுந்தர்ராஜனும் கொய்யாக்காய் விற்றுக்கொண்டிருப்பார். நீட் தேர்வு பல ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும், அதனால்தான் போராடுகிறோம். நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என முழங்கினார்கள். இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் அவ்வளவாகப் பேசாமல், மாணவர்களைப் பேசவைத்து கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close