Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ-ஜியோ போராட்டம்! மாட்டு வண்டியில் வந்த தாசில்தார்!

சிவகங்கையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் பேசும்போது, "ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின்மூலம் புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக கடந்த மாதம் 18-ம் தேதி, மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகு, ஆகஸ்ட் 5-ம் தேதி, காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னைப் புறநகரில் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தடுப்புகளையும் மீறி, சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி, இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை சென்னையே அதிரும் வகையில் நடத்தி முடித்தோம்.


மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கையில், 5,000-க்கும் மேற்பட்டவர்கள்  மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் கொட்டும் மழையில் கைதுசெய்து, அலங்கார், மாயா திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், மாட்டுவண்டியில் வந்திறங்கினார்கள். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, போரட்டக் கலத்திலேயே சமைக்கும் பணியை சத்துணவுப் பணியாளர்கள் மேற்கொண்டனர். மதிய உணவாக லெமன், தயிர் சாதம் வழங்கப்பட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட 3 ஆயிரம் பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close