Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படவில்லை: கர்நாடக அரசு திட்டவட்டம்

'பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் அளிக்கப்படவில்லை' என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது. 


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சசிகலா, இளவரசி உள்ளிட்டோர்... பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, கடந்த ஜூலை மாதத்தில் புகார் தெரிவித்தார். சிறைத்துறை ஐ.ஜி-க்கு அனுப்பிய புகார் கடிதத்தில், சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பேசப்படுவதாகவும் ரூபா கூறியிருந்தார். இந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி இருவருமே பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.


இந்தச் சூழலில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, '‘சிறைச்சாலையில் சசிகலாவுக்கு எந்தவொரு சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை. மற்ற கைதிகளைப் போலவே அவரும், அவருடைய உறவினர் இளவரசியும் நடத்தப்படுகின்றனர். இதை நேரில் நானே சென்று பார்த்தேன். சிறையில், சசிகலாவுக்கு வேலைகள் எதுவும் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நான் ஆய்வு மேற்கொள்ளவில்லை. சிறையில் அவருக்கு வேலைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்படும்'’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close