Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரிஜினல் லைசென்ஸ் விவகாரம் - ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அலைமோதிய நாடோடி இன மக்கள்!

'வாகன ஓட்டுநர்கள், கட்டாயமாக ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்' என்கிற உத்தரவு காரணமாக, நாடோடி இன மக்கள் லைசென்ஸ் எடுக்கவும், புதுப்பிக்கவும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் குவிந்தனர்.

லைசென்ஸ் பெற வந்த கூட்டம்

வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள், ஒரிஜினல் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்கிற உத்தரவு காரணமாக, புதிதாக லைசென்ஸ் எடுக்கவும் காலாவதியான லைசென்ஸை புதிப்பிக்கவும் ஏராளமானோர் ஆர்வம் காட்டிவருகிறார்கள். இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக வரக்கூடிய கூட்டத்தைவிடவும் அதிகமானோர் வருவதால், கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் திணறுகின்றனர்.

நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கூடுதலாக கவுன்ட்டர்கள் அமைத்து, கூட்டத்தைச் சமாளிக்கிறார்கள்.நாடோடி இன மக்களும் அதிக அளவில் வந்து லைசென்ஸ் எடுத்துச்செல்கின்றனர். ஒரு சிலரின் லைசென்ஸ் கால அவகாசம் முடிவடைந்த காரணத்தால், அதைப் புதுப்பிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். நெல்லை பேட்டையில், ஸ்காட் காலனியில் குடியிருக்கும் நாடோடி இன மக்கள் லைசென்ஸ் பெறக் காத்திருந்தனர். 

லைசென்ஸ் அலுவலகம்

அவர்களிடம் பேசுகையில், ‘’கட்டாயமாக ஒரிஜினல் லைசென்ஸ் வெச்சிருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு லைசென்ஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்னு  கலெக்டர்கிட்ட கோரிக்கை வெச்சோம். அதை ஏற்று,  முதல்ல 40 பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டது. மீதி உள்ள 17 பேருக்கு லைசென்ஸ் எடுக்கிறதுக்காக இப்போ வந்திருக்கோம். 

நாங்க தொழிலுக்காக இருசக்கர வண்டியைப் பயன்படுத்துறோம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில், வரும் 21-ம் தேதி தசரா திருவிழா தொடங்குகிறது. அதில் பாசி, ஊசி உள்ளிட்டவை  விற்பனை செய்வோம். அடுத்த மாதம் ஐயப்பன் சீசன்ல கேரளாவுக்குச் செல்வோம். அங்கு செல்லும்போது, ஒரிஜினல் லைசென்ஸ் அவசியம். அதனால, அதை எடுக்க வந்திருக்கோம். அரசும் அதிகாரிகளும் எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உதவி செய்யுறாங்க’’ என்கிறார்கள் மகிழ்ச்சியுடன்.     

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close