Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறியல் செய்த ரயில் பயணிகள் மீது தடியடி; அரக்கோணத்தில் பதற்றம்

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் தாமதமானதைத் தொடர்ந்து பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களைத் தடியடி நடத்தி ரயில்வே காவல்துறையின் கலைத்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல், சென்னைக் கடற்கரை, வேளச்சேரி மார்க்கமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிகின்றன. மேலும் ,லோக்கல் விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விரைவு ரயில்களில்தான் பயணிகள் அதிகமாகப் பயணிக்கிறார்கள். அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் லோக்கல் விரைவு ரயிலின் பயண நேரம் 1.30 மணி நேரம்தான். பயண நேரத்தில் அரை மணி நேரம் குறைவதால் இந்த ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கின்றனர்.

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை அனைத்து ரயில்களும் புறப்படத் தாமதமானது. இதனால், ரயில் நிலைய மேலாளர் அறையை முற்றுகையிட்ட பயணிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி மறியல் செய்தனர். இதனால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, பயணிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். நாலாப்பக்கமும் பயணிகள் சிதறி ஓடினர். இதனால் அரக்கோணம் ரயில் நிலையம் பதற்றத்துடன் காணப்படுகிறது.

பயணிகளின் மறியலால் திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரல் வரும் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close