Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை!

செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தற்போது கூற முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கிவிட்டது. டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளார். சபாநாயகர் எடுக்கும் முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்குடன் இதைச் சேர்க்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், 'செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது' என்று கூறி, டி.டி.வி.தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close