Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார் அணிவகுப்பில் கதிகலக்கிய வைத்திலிங்கம்!

100 காரிகளில் ஊர்வலம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில், தற்காலிகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் பதவி பறிக்கப்படுவதாகவும், அவரால் கட்சியில் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவர்களின் பதவி செல்லாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் வைத்திலிங்கம். சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என முதலில் அறிவித்தது வைத்திலிங்கம்தான். இறுதியில் அவரை வைத்தே, சசிகலா பொறுப்பிலிருந்து நீக்கப்படும் தீர்மானத்தை முன்மொழிந்தது எதார்த்தம் இல்லை.

மேலும், அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளருக்கு பதில், கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க விதிகளின்படி, பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருந்த, அனைத்து பொறுப்புகளும் அதிகாரங்களும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். அவரை ஆதரவாளர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி வழியாக, சொந்த ஊரான தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டார் வைத்திலிங்கம். அவரை 100 கார்களில் பின் தொடர்ந்த தொண்டர்கள், ஊர்வலமாகச் சென்றனர். இந்தத் திடீர் வாகன அணிவகுப்பால், திருச்சி முதல் தஞ்சை வரையிலான சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. ''சொன்னபடி சசிகலாவை நீக்கினோம். அதனால் வைத்திலிங்கத்துக்கு, இவ்வளவு பெரிய வரவேற்பு'' என்றார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

வீடியோவை காண க்ளிக் செய்க...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close