Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு!

மசூர் பருப்புகள் தாராளமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் மூலமாக கனடா பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு இதில் ஏதேனும் ஒன்று சப்ளை செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு  டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் " மசூர் பருப்பு சாப்பிட்டால் முடக்கு வாதம் வரும் என்று ஆய்வறிக்கை பெறப்பட்டதன் அடிப்படையில் அப்போது இருந்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதன் அடிப்படையில்  பொது விநியோக திட்டம், சிவில் சப்ளை அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் கூட்டத்தில் மசூர் பருப்பு கொள்முதல் செய்யக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு, பின்பு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை வைத்து காரைக்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் ஆதிஜெகநாதன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்தப் பருப்பை தடைசெய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்கள், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு மசூர் பருப்பை விநியோகம் செய்யக்கூடாது என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றம், மசூர் பருப்புக்கு மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய  இடைக்கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மசூர் பருப்பு தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களில் மசூர் பருப்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே சண்டை வருகிறது. இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொந்தளித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close