Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

128 காவலர்களுக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, 128 தமிழகக் காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 6 அலுவலர்களுக்கும் மற்றும்  விரல்ரேகைப் பிரிவில் ஒரு காவல் கண்காணிப்பாளருக்கும் ஒரு காவல் துணை கண்காணிப்பாளருக்கும் ஆக மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் "தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும் வெண்கலப் பதக்கமும் அளிக்கப்படும். முதலமைச்சர் பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவார்கள்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலிப் பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட, தலைமறைவாக இருந்த குற்றவாளி ராமையா என்கிற ரமேஷ் என்பவரை 6.11.2016 அன்று பிடிக்கும்போது திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றும் பா.திருமலை நம்பியைக் குற்றவாளி இரும்பு கம்பி கொண்டு தாக்கியதில் தனது இடது தொடையில் காயப்பட்டார். எனவே அவரது தன்னலம் கருதாத கடமையுணர்ச்சி மிகுந்த வீரதீர செயலைப் பாராட்டி அவருக்கு காவல் துறைக்கான தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பரிசு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close