Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சிகளும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலையிலிருந்து அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோருடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதையொட்டி தற்போது, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் தமிழகத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி

தி.மு.க சார்பிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பிலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தற்போது கூற முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கிவிட்டது. டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளார். சபாநாயகர் எடுக்கும் முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்குடன் இதைச் சேர்க்கக் கூடாது' என்று தெரிவித்தார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், 'செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது' என்று கூறி, டி.டி.வி.தினகரன் மற்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி இன்று காலையிலிருந்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close