Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழ்நாடு முழுவதும் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பணி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள் வேறு வேறு பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் காவல்துறை தலைவராக இருந்த ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர்களுக்குக் காவல்துறைத் தலைவர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஏ.எஸ்.பி-க்களாக இருந்த சுஜித்குமார், ரோஹித் நாதன் ஆகியோர்களுக்கு எஸ்.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலர் நல கூடுதல் இயக்குநர் பிரதீப் பிலிப், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோரப் பாதுகாப்புக் குழு ஏ.டி.ஜி.பி-யாக வன்னியப்பெருமாளும் ஊர்க் காவல்படை ஏ.டி.ஜி.பி-யாக கருணாசாகரும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதித்துறை தலைவராக தமிழ்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close