Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் திறன் வளர்த்தல் பயிற்சியை கலெக்டர் தொடங்கிவைத்தார்

 

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் இணைந்து, மூன்றாம் பாலினத்தவருக்கான விழிப்புஉணர்வு மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சியை குமரிமாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான், நாகர்கோவிலில் தொடங்கிவைத்தார். கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சியளிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் வங்கிகள்மூலமாக ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுவருகின்றன. இதன்மூலம் குறைந்த கல்வி அறிவும் அனுபவமும் பெற்ற அனைவரும் சுய தொழிலைத் தொடங்கி சொந்தமாக முன்னேற வழிவகைசெய்கிறது.

இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவரும் இந்த சுயதொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  நாகர்கோவிலில் தொடங்கிவைத்தார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை இந்தியன் ஓவர் சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் இணைந்து, அப்பளம் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், மசாலா பொடி தயாரித்தல் போன்ற பயிற்சிகளை, மூன்றாம் பாலினத்தவரும் செய்யும் வகையிலும், விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் திறன் வளர்ப்புப் பயிற்சியைத் தொடங்கிவைத்தனர்.  மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பயிற்சியளித்த பின்னர், பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close