Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நள்ளிரவில் மயங்கிச் சரிந்த ஊழியர்: உள்ளிருப்புப் போராட்டத்தில் பரபரப்பு!

ஊழியர் போராட்டம்

அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர் ஒருவர், நள்ளிரவில் மயங்கிச் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ- ஜியோ சார்பாக, தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

கடந்த 7-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், புதிதாகப் பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கிப் போராடிவருகின்றன. நெல்லையில், அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஊழியர் மயக்கம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டியக்கத்தின் சார்பாக நடைபெறும் இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், அனைவரும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சாரல் மழை, கொசுக்கடி, வாட்டும் குளிர் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியரான ஜெயக்குமார் என்பவர், திடீரென மயங்கிச் சரிந்தார். சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஆசிரியரான அவர், தொடர்ந்து போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற நிலையில்,  நள்ளிரவில் மயக்கம் அடைந்தார். இதனால், போராட்டக் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரது உடல் நிலை சீராக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் உள்ளார். இந்தச் சம்பவம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close