Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைமைச்செயலக ஊழியர்கள் இன்று முதல் போராட்டம்!

தமிழகத்தில், கடந்த 7-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராடிவருகின்றனர். ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தலைமைச் செயலகம்


இந்நிலையில், நேற்று தலைமைச்செயலக ஊழியர்கள், பணியின்போது கறுப்புச் சட்டை அணிந்தும் கறுப்புக் கொடியை சட்டையில் அணிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, முதலமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில், போராட்டத்தைத் தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து முடிவெடுக்க தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பு, தலைமைச்செயலக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தின்போது சங்கத் தலைவர் கணேசன், அரசு கூறியதற்கு இணங்க போராட்டத்தைத் தள்ளிவைக்கலாம் எனக் கூறியதால், அங்கு சலசலப்பு உண்டானது. மேலும், தலைவருக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். 


இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போராட்டம் நடத்தப்படுவது உறுதி என்றும், போராட்டத்தின் வடிவம்குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றும் தலைமைச்செயலக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close