Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்” - எச்சரிக்கும் சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ, cbse

 பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, அவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ பள்ளியின் அங்கீகாரம் உடனடியாக ரத்துசெய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு பள்ளியில், 7 வயது மாணவர் படுகொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அசம்பாவிதம் தொடர்பான பரபரப்புகள் அடங்குவதற்குள்ளாகவே, டெல்லியில், 5 வயதே நிரம்பிய சிறுமி, பள்ளி ஊழியராலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஜீரணிக்கவே முடியாத இதுபோன்ற நிகழ்வுகள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கின. இதையடுத்து, பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது. அதன்படி, “மாணவ-மாணவிகள், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதுகாப்புடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலைப் பெறுவது அவர்களது அடிப்படை உரிமை. இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்கவேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு. பள்ளி வளாகத்துக்குள்  உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். பள்ளி வளாகத்துக்குள் நிச்சயமாக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும்”, எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close