Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்தது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக உயர்ந்து வந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு

சில தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 124.10 அடியாக உள்ளது. மேலும், அணையின் நீர் இருப்பு 3440 மி.கன அடியாகவும், அணைக்கான நீர் வரத்து 447 கன அடியாகவும் உள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக அதிகரித்த அணையின் நீர்வரத்து தற்போது குறையத் தொடங்கியுள்ளதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், மணிக்கு 218 அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவும் காணப்படுகிறது. மழை, அதிகபட்சமாக பெரியகுளத்தில் 14.8 மி.மீ அளவும், தேக்கடியில் 7.8 மி.மீ அளவும் பெய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையைப் போலவே, வைகை அணையின் நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 36.42 அடியாகவும் நீர் வரத்து 222 கன அடியாகவும் உள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close