Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு மணி நேரத்தில் வேலையைவிட்டு நீக்க முடியும்! நீதிபதிகள் எச்சரிக்கை

'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும்' என்று எச்சரித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு ஊழியர்கள் போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் அரசு ஊழியர்கள் கேலிப் பொருளாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும், நீதிமன்றத்தை நாடாமல் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுத்து, சிறிது நேரத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

போராட்டத்தைக் கைவிட்டால், செப்டம்பர் 22-ம் தேதிக்குள் போராட்டக்காரர்களைச் சந்திக்க தலைமைச்செயலாளருக்கு உத்தரவிடுகிறோம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'உடனடியாகப் போராட்டத்தை கைவிட நிர்வாகிகள் தயங்கினால், ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்க முடியும்' என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close