Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதிகள் எச்சரிக்கை எதிரொலி! ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். அப்போது, அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படுவில்லை. இதனாலேயே போராட்டத்துக்குத் தள்ளப்பட்டோம் என்று கூறினர். இதையடுத்து நீதிபதிகள், நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் அரசு ஊழியர்கள் கேலிப் பொருளாக்கியுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுத்து சிறிது நேரத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்காவிடில் ஒரு மணி நேரத்தில் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடியும் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாக்டோ- ஜியோ தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பிற்பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தைக்காக வரும் 21-ம் தேதி தலைமைச் செயலாளர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், வரும் 21-ம் தேதி கோரிக்கைகள் தொடர்பாகத் தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close