Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதிப்பில்லை!’- வானதி சீனிவாசன்

நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு எதிராகவும் பி.ஜே.பி. மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய  வானதி சீனிவாசன், ''மருத்துவக் கல்வியைத் தரமாக கற்பதற்கு நீட் தேர்வை கொண்டுவந்தது. காங்கிரஸ் அரசு. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அதை நடைமுறைப்படுத்தியது பிஜேபி அரசு. அதற்கு எந்த ஏற்பாட்டையும் செய்யாத தமிழக அரசு, தற்போது தடை கேட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகவில்லை. மாணவர்களின் நலனை கண்டுகொள்ளாமல் தமிழக ஆளும்கட்சியினர் பதவிகளுக்காக தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போது மக்களிடம் தவறான தகவலைப் பரப்பி, அனிதாவின் தற்கொலையை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

வானதிசீனிவாசன்

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது. சமூக நீதியும் கெடவில்லை. 85 சதவிகிதம் இடம் மாநிலங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து போராட்டம் நடத்துகிறார்கள். நவோதயா பள்ளிகள் தொடங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிக்காகக் குரல் கொடுத்த மதுரையிலிருந்து இந்த உத்தரவு வந்துள்ளது மகிழ்ச்சி.  இந்தி திணிக்கப்பட்டால் கட்சியினர் உயிரைக் கொடுப்பார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார், அப்போதுகூட தன்னோட உயிரைக் கொடுப்பேன் என்று சொல்லவில்லை. அவர் மகள் நடத்தும் பள்ளியின் பெயர் சன்சைன். அங்கு இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது, இதுதான் திமுக. திராவிட ஆட்சிகளுக்கு எதிராக கூட்டணி சேர்ந்த திருமாவளவன், இப்போது திமுகவுடன் சேர்ந்து போராடிவருகிறார். மொத்தத்தில் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவது திமுக, அதிமுக கட்சிகள்தான்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close