Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வின் மகத்துவம் தெரியுமா? ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்

அரியலூர் மாணவி அனிதா இறப்புக்குப் பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் எனப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், சேலத்தில் நீட் தேர்வை ஆதரித்து பி.ஜே.பி-யினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் கோபிநாத் தலைமைதாங்கினார். வேலூர் கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், செவ்வை மண்டலத் தலைவர் சென்னகிருஷ்ணன் ஆகிய நிர்வாகிகளும், 50-க்கும் மேற்பட்ட பி.ஜே.பி தொண்டர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோபிநாத், ''தமிழக மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஜனநாயக விரோத, தேச விரோத சக்திகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் ஆட்சிசெய்யும் கேரளாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பில்லை. காங்கிரஸ் ஆட்சிசெய்யும் கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பில்லை.
சமூக நீதியைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் சாதி அரசியல் செய்கின்றவர்களும், தமிழகத்துக்கு அநீதி என்ற பெயரில் பிரிவினை அரசியல் பேசக்கூடியவர்களும்,  தமிழக மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுத்திவருகிறார்கள். ஆதி திராவிட மக்களுக்கு பாதிப்பு என்ற பெயரில் வாக்கு வங்கியைக் குறிவைத்து அரசியல் செய்யும் தி.மு.க., காங்கிரஸ்., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பணம் மற்றும் பிண அரசியல் செய்துவருகிறார்கள். தி.மு.க., குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் மாணவர்களைத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வுமூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்றிருக்கிறார்கள். நீட் தேர்வு மூலம் கல்விக் கொள்ளையை முழுமையாகத் தடைசெய்ய முடியும்'' என்றார்.

அவரை அடுத்துப் பேசிய வேலூர் கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், ''நீட் தேர்வு மூலம் ஏழை, எளிய மாணவர்கள் படிக்க முடியாது என்று தி.மு.க. பொய்ப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது. தேர்தலில் அவர்களுக்கு மக்கள் சாவுமணி அடிக்க வேண்டும். சின்னச்சின்ன உதிரி கட்சிகளைக் கூட வைத்துக்கொண்டு கூப்பாடு போடுகிறார்கள். மக்கள் நன்றாகப் படித்து, தெளிவாக இருக்கிறார்கள். உங்கள் போராட்டத்துக்கு செவிசாய்க்க மாட்டார்கள். ஆளுங்கட்சி நீட் தேர்வின் மகத்துவத்தைத் தெரிந்துகொள்ளாமல், தமிழகத்துக்கு விலக்குக்கேட்டு நீதிமன்றத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்.  நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழகத்துக்கு வர வேண்டும். நவோதயா பள்ளி வந்தால், தேசிய ஒருமைப்பாடு வளரும். கட்டணம் இல்லா கல்வியும் உருவாகும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close