Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விளையாட்டில் தமிழக அளவில் கலக்கும் அரசுப் பள்ளி!

திருவண்ணாமலை மாவட்டம் கொளக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான கோகோ மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளின் வெற்றி பதக்கங்களும் ,சான்றிதழ்களும் குவிந்துகிடக்கின்றன. வசதியானவர்களுக்கும், பரிந்துரைக் கடிதம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் விளையாட்டுத் துறை கைகுலுக்கி வரவேற்கிறது. அரசுப் பள்ளிகள் எத்தனை பெரிய பதக்கங்கள் வாங்கினாலும் வெளியில் தெரிவது கிடையாது. ஆனால், ஆண்டுதோறும் திறமையான கோகோ மற்றும் தடகள வீரர், வீராங்கனைகளை, கொளக்குடி அரசுப் பள்ளி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கொளக்குடி அரசுப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ராமமூர்த்தியிடம் பேசினோம். முதல்ல இந்த ஸ்கூல்ல 
ஆனந்த் என்கிற சார்தான் கோகோ விளையாட்டை கொண்டுவந்து பயிற்சி கொடுத்தார். நானும் அவர் கூட இருந்தேன். இந்த ஸ்கூல்ல பத்து வருஷமா வேலை செய்யுறேன். 2012 முதல் இந்த ஸ்கூல் பசங்க கோகோ மற்றும் தடகளத்துக்காக ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போகத் தொடங்குனாங்க. 2015-ல் ஆனந்த் சார் ப்ரோமோஷன்ல வேறு ஸ்கூலுக்கு மாறுதலாகப் போய்ட்டாரு.அதன்பின் நானும்  முனியப்பன் என்பவரும் பசங்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அவரும் கோகோ பிளேயர்தான். இந்த ஸ்கூல் பசங்க வெறித்தனமாகப் பயிற்சி செய்வாங்க. தனியார் ஸ்கூல் பசங்க பல எக்யூமென்ட்ஸ் போட்டு விளையாடுவாங்க இந்தப் பசங்ககிட்ட அது கிடையாது. பசங்க எப்போ பயிற்சிக்குக் கூப்பிட்டாலும் வந்துரு்வாங்க. வருஷத்துக்கு நாலு பேர் பெஸ்ட் பிளேயர் வாராங்க. 72 பேர் இந்த வருஷம் தகுதியாக இருக்காங்க. ஸ்டேட் லெவலுக்கு 12 பேர் போறாங்க. இந்தப் பசங்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தா இன்டர்நேஷனல் லெவலுக்குக் கொண்டு போகலாம். ஸ்போர்ட்ஸ் ஸ்கில் இவங்க கிட்ட இருக்கு தமிழகத்தில் பெஸ்ட் பிளேயர்ஸ் இவங்கதான். தடகளத்திலும் 8 பேர் ஸ்டேட், நேஷனல் லெவல் போறாங்க.

மாவட்ட அளவில 15 பேர் போறாங்க. கடந்த 10 வருசத்துல 4000 சர்டிஃபிக்கெட் 3000 மெடல்களை இந்தக் கொளக்குடிப் பள்ளி மாணவர்கள் வாங்கி இருக்காங்க. இந்தப் பள்ளி மாணவி ரோஜா SGFI தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கோகோ விளையாட்டுல வெள்ளிப் பதக்கம் வாங்கியிருக்காங்க.கடந்த 64 ஆண்டுகளுக்குப் பிறகு கோகோ விளையாட்டுல தமிழகம் முதல் தடவையா பெற்ற பதக்கம் அது. பசங்களுக்குச் சரியான உணவு, ஜூஸ் கிடையாது. படிப்புப் போக மீதி நேரத்துலதான் பயிற்சி கொடுக்கிறேன். ரோஜா, சிநேகா என இரண்டு பேர் இந்த முறை நேஷனல் டீமுக்கு செலக்ட் ஆகியிருக்காங்க. பசங்க கிட்ட ஒழுக்கம் இருக்கிறதுதான் தமிழகத்தைத் தனித்துவமாக தெரிய வைக்கிறது. இந்தப் பிள்ளைங்க குக்கிராமங்களைச் சேர்ந்தவங்களாக இருக்கிறதால, இவங்க திறமை வெளி உலகத்துக்குத் தெரியாமலே போய்டுது என்றார்.

ராமமூர்த்தியும் தற்காலிக ஆசிரியர்தான். மாதம் 7000 ரூபாய் சம்பளம்தான். அதில் பாதியை மாணவர்களுக்கே செலவு செய்து விடுகிறார். ஒருவகையில் இவரும் கனவு ஆசிரியர்தான். போதிய உணவு, போதிய பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் விளையாட்டுத் துறையில் சாதிக்க கொளக்குடிப் பள்ளி மைதானத்தைச் சுற்றி வரும் ஒவ்வொரு மாணவர்களின் கண்களிலும் பதக்கக் கனவு தெரிகிறது. தமிழக அரசின் விளையாட்டுத் துறை கொளக்குடி அரசுப் பள்ளியைக் கண்டு கொள்ளுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close