Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நிலத்தடி நீர் திருட்டை தடுக்காவிட்டால் குடியேறும் போராட்டம் நடத்துவோம்'

நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக நிலத்தடி நீரை லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், ‘’தாமிரபரணிப் பாசனத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவந்தது.  ஆனால், இம் மாவட்டத்தில் ஒரு ஒன்றியப்பகுதிகூட நிலத்தடி நீர்வளத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இல்லை என்பதுதான் உண்மை. 12 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்கள் மிக அதிகமாக தண்ணீர் எடுக்கப்பட்ட பகுதியாகவும், புதூர் ஊராட்சி ஒன்றியம் நெருக்கடியான பகுதியாகவும், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அரை நெருக்கடியான பகுதியாகவும் உள்ளது.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியப்பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகளுக்காக நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி ஆயிரக்கணக்கான லாரிகளில் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. நிலத்தடி நீர் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை காவல்துறை வசம் பிடித்துக் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில கிராம மக்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று தங்கள் கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பெற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணி நடக்கிறது. மேலும், 10 அனல்மின் நிலையம் தூத்துக்குடியில் துவங்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மதுரை  – தூத்துக்குடி வரை இண்டஸ்ட்ரியல் கார்டியர் அமைப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இங்கே குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத சூழலில் தினமும் பலகோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கும் இனிவர இருக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீருக்கு எங்கே செல்ல முடியும். இதேநிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மாவட்டம் பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, போர்க்கால அடிப்படையில் இதை உடனே ஆட்சியர் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும்  போராட்டம் நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close