Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

நீட் தேர்வுக்கு எதிரான வரும் 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் விளக்க பொதுக்கூட்டத்தை தினகரன் ஆதரவாளர்கள் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு காவல்துறையிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. அம்மா அணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'எங்கள் அணியின் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து விளக்கப் பொதுக்கூட்டத்தை, வருகிற 19-ம் தேதி  திருச்சி உழவர் சந்தை அருகே நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்கு அனுமதி வழங்கக்கோரி, திருச்சி காவல் துறையினரிடம் மனு  அளித்தோம். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியோ மறுத்தோ எவ்வித பதிலும் காவல்துறை தரப்பில் வழங்கப்படவில்லை. எனவே, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில், 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தைப் பகுதியில் காவல்துறை பாதுகாப்போடு பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அந்த இடத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருவது உள்ளிட்ட சில காரணங்களால் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, பல கட்சிகள் அங்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என கேட்ட நீதிபதிகள், தேவைப்படின் போதுமான போலீஸ் பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள் என கூறி தினகரன் தலைமையில் திருச்சி உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வழங்கும் விதிமுறைகளை பின்பற்றி சட்டம் ஒழுங்கை மீறாமல் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close