Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ நீட்டுக்கு எதிராக வரலாறு காணாத போராட்டம்’ - எச்சரிக்கும் வைகோ

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழுவிலக்கு அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிடில், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்று ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 


அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் ம.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதில், சமூக நீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பை தவிடுபொடியாக்கும் என்பதால், அதிலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். அதுதொடர்பான தமிழக அரசின் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காவிட்டால், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் வரும் என்று எச்சரிக்கை விடுப்பதாக ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கர்நாடகா காவிரியில் அணைக் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை இலங்கை திரும்பப்பெற மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரது சிலைகளுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close