Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ்கோடியில் கடைகளை அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட மீனவர்கள்

தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகள் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
1964-ம் ஆண்டு புயலில் தனுஷ்கோடி துறைமுக நகரம் அழிந்துபோனது. இதையடுத்து, அங்கு வசித்து வந்த மீனவக் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய இடங்களில் வசித்து வந்தனர். இந்நிலையில், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி அடிப்படை வசதிகள் இன்றி அங்கேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ்கோடியைப் புனரமைக்கும் வகையில் அரிச்சல் முனைப் பகுதி வரை சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வசதியால் தனுஷ்கோடி பகுதிக்கு நாள்தோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர்.

கடைகளை அகற்ற சென்ற அதிகாரிகள் முற்றுகை
இதையடுத்து, தனுஷ்கோடி மீனவர்கள் தனுஷ்கோடி நெடுஞ்சாலையின் இரு புறங்கள் மற்றும் புயலின் நினைவுச் சின்னங்களாக விளங்கும் கட்டடங்களுக்கு அருகாமையில் ஏராளமான கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். நினைவுச் சின்னங்களுக்கு இடையூறாக உள்ள இந்தக் கடைகளை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ராமேஸ்வரம் வட்டாட்சியர் கணேசன், துணை வட்டாட்சியர் அப்துல்ஜபார் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் இன்று தனுஷ்கோடிக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
இதை அறிந்த அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் ஈடுபட்டனர். இதையடுத்து, தனுஷ்கோடியின் மாற்றுப் பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி அளிப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மீனவர்கள் தங்கள் கடைகளை தாங்களாகவே அகற்றத் தொடங்கினர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் தனுஷ்கோடி பகுதியில் சுமார் 4 மணி நேரம் பதற்றம் நிலவியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close