Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்தது

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் அருள்மிகு வல்லபை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை சபரிமலை அருள்மிகு ஐயப்பசுவாமி கோயில் தலைமைக்குருக்கள் கண்டரு ராஜூவரு தந்திரி நடத்திவைத்தார்.


ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வல்லபை ஐயப்பசுவாமி திருக்கோயில், இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கான விக்கிரகங்களும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோயில் மேற்கூரை, மூலவர் முன்பாக 18 படிகள் ஆகியன தங்க முலாம் பூசப்பட்டு கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

வல்லபை ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம்

மகாகும்பாபிஷேகம் தொடர்பான பணிகள் இம்மாதம் 11-ம் தேதி ஆச்சாரிய வரணத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாஸ்து ஹோமமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. .கும்பாபிஷேகத்தை சபரிமலை அருள்மிகு ஐயப்பசுவாமி திருக்கோயில் தலைமைக் குருக்கள் கண்டரு ராஜூவரு தந்திரி நடத்தி வைத்தார். பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிபு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. கும்பாபிஷேக விழாவுக்கு அருள்மிகு வல்லபை ஐயப்பசுவாமி கோயில் குருவடியார் மோகன் சுவாமிகள் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.திருப்புல்லாணி போலீஸார் தலைமையில் கும்பாபிஷேக விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மதியம் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷகம் கேரள மாநிலம் தாந்திரிக முறைப்படி 12 கலசங்கள் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 2005-ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகம், பின்னர் 2016-ல் நடந்த பாலாலயம் ஆகியனவும் சபரிமலை தலைமைக் குருக்களாலேயே நடத்தப்பட்டது. தற்போது நடந்துள்ள மகாகும்பாபிஷேகத்தின்போது 33 அடி உயர தங்கக் கொடிமரம் சபரிமலையில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடதக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close