Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெய் தீபம்தான் ஏற்றப்படுகிறதா? ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

விளக்கு

ஆன்மிக ஸ்தலங்களில் நமது முன்னோர்களின் வழிபாட்டு முறை மிகவும் மதிக்கப்பட்டது. ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களிலும் ஒரு அறிவியல் உண்மை ஒழிந்திருக்கும். கோயில் சிற்பங்களில் ஆரம்பித்து கோயில் பிரசாதங்கள் வரை மருத்துவ குணங்களை கொண்டிருந்தது காலம் மாற அவையும் மாறிப்போனது யுனெஸ்கோ அறிக்கைகளோ அச்சத்தை உருவாக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர் தாக்கல்செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும், கோயில் வளாகங்களிலும் விற்கப்படும் நெய்தீபம், டால்டா, கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு கலந்த எண்ணெய் மற்றும் வேதியியல் பொருள்களை கலந்து நெய்தீபம் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். மேலும், வேதியியல் பொருள்களால் உருவாக்கப்பட்ட சூடத்தையும் விற்பனை செய்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தும்போது கோயில் வளாகத்தில் கார்பன்-டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு அதிகரித்து கோயிலின் சுற்றுப்புறமும் பக்தர்களின் உடல்நிலையும் பாதிக்கிறது. மேலும், கோயிலில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் தங்கு தடையின்றி உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் கோயிலின் உள்புறமும், குளங்களும் மாசுபடுகிறது. எனவே, பழைமையான கோயில்களையும், பக்தர்களின் உடல்நிலையையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கோயில் வளாகங்களில் மண் பானையில் தீபத்துக்கான தூய நெய்யை விற்கவும் கோயில் மற்றும் கோயில் வளாகப் பகுதிகளை பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்தப் பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றுவதற்காக தூய கலப்படமற்ற நெய் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close