Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகை ஆற்றை வாகன நிறுத்தமாக மாற்றிய ஜவுளிக் கடைக்காரர்கள்..!

மதுரை மாவட்டம் வைகை நதியின் வடகரையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஜவுளிக் கடைக்கு வருகை தந்த அனைவரும் தங்களது வாகனங்களை வைகை ஆற்றுக்குள் நிறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 
 

வைகைஆறு

வைகை வடகரையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு வருகை தந்த அனைவரும் தங்கள் வாகனங்களை வைகை ஆற்றுக்குள் நிறுத்தினார்கள். ஏற்கெனவே இக்கடையின் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தபோது வைகை ஆற்றை வாகன நிறுத்தமாகப் பயன்படுத்திய செய்தி விகடனில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. மறுநாள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாநகராட்சி அப்புறப்படுத்தியது. இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி வாங்கி அமைச்சர் செல்லூர்ராஜு ஆதரவில் ஆற்றுக்குள் கபடிப்போட்டி நடத்தினார்கள். அப்போது தரைப்பாலத்திலிருந்து போட்டி நடக்கும் இடத்துக்குச் செல்ல மணல் பாதை அமைத்திருந்தனர். இந்நிலையில்தான், இன்று புதிதாகத் திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு வரும் வாகனங்களை மீண்டும் ஆற்றுக்குள் நிறுத்தியிருந்தார்கள். இதைப்பற்றிய புகார் சென்றும், அதிகாரிகள் உதவியுடன் தொடர்ந்து வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close