Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு - கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் !

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
7-வது ஊதியக் குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், சிறப்புக்காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியமுறையை மாற்றி, காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று முதல் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் கிளை சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் போராட்டம் இன்று காலையிலேயே தற்காலிக வாபஸ் பெறப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று மாலை திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close