Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவும் அவரது கணவர் மாதவனும் ஒன்றிணைந்தனர்: மெரினாவில் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அவரது கணவர் மாதவனும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்துள்ளனர். 


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க முழுவதும் சசிகலா வசம் சென்றது. ஆனால், சசிகலாவை விரும்பாத அ.தி.மு.க தொண்டர்கள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைத் தேடிச் சென்றனர். இதனையடுத்து தொண்டர்களின் வரவேற்பு கிடைத்ததையடுத்து தீபா தனியாகக் கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்கு எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை எனப் பெயரிட்டார். அப்போது, அவரது கணவர் மாதவன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படவே இருவரும் பிரிந்தனர். பின்னர் மாதவனும் புதிதாகக் கட்சி தொடங்கியதாக அறிவித்தார். கடந்த ஒரு சில மாத காலமாக இருவரும் பிரிந்தே இருந்தனர். இந்நிலையில், இன்று இருவரும் ஒன்றாக இணைவதாக அறிவித்துள்ளனர். மேலும் கட்சியை ஒன்றாக இணைப்பதாகவும், எந்தக் கட்சியின் பெயரில் செயல்படுவோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, இருவரும் இணைந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close