Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல்துறை பொதுமக்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி

பொதுமக்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், காவல்துறையினர் என்ன மாதிரியான பயிற்சிகளைச் செய்கிறார்கள், அவர்களுடைய திறமைகளை மக்கள் அறிந்துகொள்ளவும், காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சிகளை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மதுரை மாநகரக் காவல்துறையினர் சமீபகாலமாக நடத்தி வருகின்றனர். 

மதுரைகாவல்

அந்த வகையில் நேற்று மாலை தெப்பக்குளம் பதினாறு கால் மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை பேண்டு வாத்தியகுழுவின் இசைக் கச்சேரி  நடந்தது. அதற்குப்பின், குதிரைப்படையினரின் சாகசங்கள், துப்பறியும் நாய்ப் படை பிரிவின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சந்தேகமான பொருள்களை மோப்பம் பிடித்து நாய் எப்படி எடுத்து வருகிறது என்பதையும், திருட்டுப் பொருளை வைத்திருக்கும் ஆளை கவ்விப் பிடிப்பது போன்ற செய்முறைகளைச் செய்து காட்டினார்கள். மக்கள் மத்தியில் போலீஸ் பயிற்சி அளித்த துப்பறியும் நாய்களுக்கு உற்சாகமான கைதட்டல் கிடைத்தது. மதுரை மாநகரின் ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு  நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே உள்ள இடைவெளி  குறையும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close