Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை அம்பத்தூர் அருகே போலீஸிடம் சிக்கிய 200 கிலோ கஞ்சா!

கஞ்சா, kanja

சென்னை அம்பத்தூர் அருகே, 200 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில், சென்னை இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. அவர்களுக்குக் கஞ்சா பொட்டலங்கள் எளிதாகக் கிடைத்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் அருகே, எதிர்பாராத விதமாக 200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.

அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டில் இந்தக் கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. கள்ளிக்குப்பம் செக்போஸ்ட்டை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அங்கு போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அந்த காரை போலீஸார் நிறுத்த முற்பட்டபோது, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இறங்கி ஓடத்தொடங்கிவிட்டார். தப்பிச்சென்ற அந்த நபரை போலீஸார் துரத்திச்சென்றனர். பின்னர், காரில் சோதனை நடத்தியபோது, 200 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சாவை காரில் கடத்தி வந்தது தெரியவந்ததும், போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, மேலும், இந்தக் கடத்தலில் ஈடுபட்டவர்கள்குறித்து விசாரணை நடைபெறுகிறது. தப்பிச்சென்ற ஓட்டுநரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close