Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கைப்பிடி மண்ணைக்கூட எடுக்கவிட மாட்டேன் ! மலையைக் காப்பாற்ற உறுதியளித்த சீமான் !

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த 66-எம் உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் மலையில், சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பல ஆண்டுகளாக மலையைப் பாதுகாக்க அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். 'பெருமாள் மலை ஏலம் விடப்படாது' என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது அந்த மலையில், கற்கள் வெட்டியெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டுவிட்டதாகவும், மலையடிவாரத்தில் வெட்டி எடுத்த கற்களைச் சுத்தம்செய்து ஒழுங்குபடுத்தும் நிறுவனம் தொழிற்சாலை வர உள்ளதாகவும் உறுதியான தகவல் வெளியானது.

இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் 10 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் போராடியும் அரசு தரப்பில் எந்தப் பதிலும் சொல்லாததால் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த மலையைக் காக்கப் போராடும் உங்களுக்கு என்னுடைய ஆதரவைத் தருகிறேன். இதில் எந்த அரசியலும் இல்லை. என் மண்ணை, என் மக்களைப் பாதுகாக்கப் போராடுவேன். ஒரு கைப்பிடி மண்ணைக்கூட இங்கிருந்து யாரையும் எடுக்கவிட மாட்டேன் என உறுதியளித்தார். பெருமாள் மலையைக் காப்பாற்ற சீமான் ஆதரவு கொடுத்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் .

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close