Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடவில்லை..! மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

தமிழக அரசின் எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருகை தந்தார். விழாவில் கலந்துகொண்ட அவர், மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அவருக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி நவநீத கிருஷ்ணன் உடனிருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜெயலலிதா ஒரு சிறந்த தேசியவாதி. அவர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். தைரியமானவர். அவர் பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரது பணியை சிறப்பாக செய்துவருகிறார். தமிழக அரசின் எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தலையிடவில்லை' என்றார். நீட் தேர்வுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close