Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்.எல்.சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனடியாக வேலை வழங்கவேண்டும் - ராமதாஸ்

'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியாவின் தலைசிறந்த நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் என்.எல்.சி நிறுவனம் தானாக உருவாகிவிடவில்லை. நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள 23 கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளையும், விளைநிலங்களையும் விட்டுக் கொடுத்ததால்தான் என்.எல்.சி. நிறுவனம் உருவானது. இத்தகைய நிறுவனம் உருவானால் தங்கள் பகுதி வளர்ச்சி அடையும், தங்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு தியாகத்தை செய்தனர். ஆனால், தொடக்கத்தில் நிலம் வழங்கியவர்களுக்குக் கூட இன்னும் முழுமையாக வேலை வழங்கப்படவில்லை. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 29.06.2017 அன்று கூட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. பா.ம.க.வைச் சேர்ந்த என்.டி. சண்முகம் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த தங்கள் பதவியை காக்க மத்திய ஆட்சியாளர்களின் காலில் விழுந்து கிடக்கின்றனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தின் அடையாளம். அது பாட்டாளிகளின் சொத்து. அதை அபகரிக்கவும், அடையாளத்தை அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதுடன், தொழிலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைத்து பணிகளிலும் நிலம் தந்தவர்களின் வாரிசுகளுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்"  கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close