Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிரம்பிய மஞ்சளாறு அணை: வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனியில் உள்ள மஞ்சளாறு அணை நிரம்பியதால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணையின் முழுக்கொள்ளளவான 57 அடிக்கு 55 அடி நீர் தற்போது இருக்கிறது. தற்போது இந்த நீர் வரத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாலுமே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சோத்துப்பாறை அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணையின் முழுக்கொள்ளளவை எட்டவுள்ளது. தொடர் மழைப் பொழிவு இருந்துவருவதால் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிக மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கவலையில் உள்ளனர். மழை இல்லாத கடந்த காலங்களில் அணைகளை முறையாகத் தூர்வாரியிருந்தால் இன்னும் அதிகமான நீரைத் தேக்கியிருக்கலாம் என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close