Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.நா மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க ஜெனிவா செல்கிறார் வைகோ!

ஐ.நா-வின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் வைகோ.

vaiko

ஐ.நாவின் 35-வது மனித உரிமைகள் மாநாடு, ஜெனிவாவில் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ. 

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முன்னரே ஐ.நா. மனித உரிமை சபையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணை அறிக்கையின் முழு விபரம் ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே வைகோ பத்து நாள் பயணமாக ஜெனிவா புறப்பட்டுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் போர் முடியும் தருவாயில் இலங்கை அரசிடம் சரணடைந்தோர்கள் விபரம், போருக்குப் பின்னரான தமிழர்களின் நிலை, தமிழர்களுக்கான தற்போதைய சூழல் ஆகியவை குறித்து இந்த ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close