Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெரியாரின் 139-வது பிறந்த நாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை

பெரியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் புகைப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

பெரியார் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் தமிழக ஆளுங்கட்சியனர்

தமிழக அரசு சார்பில் சென்னையில் இருக்கும் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினார். 

மேலும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா உள்ளிட்டவர்களும் பெரியார் படத்துக்கு மலர்தூவியும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close