Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதிஅளித்தது. அதனால், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படுகிறது. தொடர்ச்சியான விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிக சுமையைத் தாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் அதன் பயன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு மாற்றவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close