Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கிய இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா..!

நீட் தேர்வுக்கு எதிராக இளவரசின் மகள் கிருஷ்ணபிரியாவின் தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதாவின் மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்க்கட்சிகள் சார்பிலும் மாநிலம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தநிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்தது.

இந்நிலையில், இன்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். நீட் தேர்வுக்கு எதிராக பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close