Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோவுக்கு 16 ஆண்டுகளுக்குபின் கிடைத்த விசா!

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா சபை மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு, செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கியது. இந்த அமர்வில் ஈழத்தமிழர்கள் பிரச்னையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று  அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு, ஜெனிவாவுக்குப் பிற்பகல் சென்றடைந்தார்.

ஜெனிவா

ஈழத்தமிழர்கள் அமைப்புகளின் சார்பிலும் இந்தக் கவுன்சிலில் வைகோ பங்கேற்பதற்கு ஏற்பாடுசெய்த பாரதி பிரான்ஸ் தமிழர்கள் கலைமன்றம், தமிழ்உலகம், தென்றல், பிரான்ஸ் தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்அமைப்பு, பக்கத்தைத் திருப்புவீர் அமைப்பு, சுவிஸ் ஈழத்தமிழர் பேரவை, சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்ஸ் அனைத்துலக மனிதஉரிமைச்சங்கம் சார்பிலும் வரவேற்றனர்.

2001-ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் பேரணியில் வைகோ பங்கேற்றார்.  அதன்பின்னர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெனிவாவில் ஈழத்தமிழர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பி விசாவுக்கு விண்ணப்பித்தபோதும், இலங்கை அரசின் தலையீட்டால்  விசா வழங்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது நீக்கியுள்ள நிலையில் விசா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ம.தி.மு.க. தொண்டர்களும், ஈழத்தமிழர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாளை ஜெனிவாவில் நடைபெறும் பிரமாண்டமான ஈழத்தமிழர் பேரணியில் வைகோ பங்கேற்கிறார். ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை பற்றி, மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close