Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக் கதை

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு குட்டி கதை சொன்னார்.

”ஒரு நாட்டை  வலிமை வாய்ந்த மாபெரும் மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். மக்கள் கேட்கும் பொருள்களையெல்லாம் வாரி வாரி வழங்கி கொடையில் சிறந்தவனாக திகழ்ந்தான். அந்த மன்னனுக்கு நீண்ட காலமாக ஒரு வருந்தம் இருந்து வந்தது. தனக்கு வாரிசு இல்லாததால் இந்த நாட்டை யாரிடம் ஒப்படைத்துச் செல்லுவது என்று வேதனை அடைந்துகொண்டிருந்தான்.

ஒரு நாள் தன் அரன்மனையில் பொதுமக்கள் யாராரெல்லாம் தங்கள் பெயர்களை பதிவுசெய்து விட்டுப் போகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்த நாட்டை ஆளலாம் என்று அறிவிப்பு செய்தான். அதையடுத்து மக்கள் அரசரின் அரண்மனைக்கு வந்து தங்கள் பெயர்களை எழுதிவிட்டுச் சென்றார்கள். நிறைய பெயர் எழுதி இருந்ததால், 5 வருடம் இந்த நாட்டை ஆண்டுவிட்டு பக்கத்தில் உள்ள மிக மோசமான கொடிய விலங்குகள், விஷ சந்துகள் இருக்கும் தீவுக்குச் செல்ல வேண்டும் என்று மன்னர் சொன்னதை அடுத்து நாட்டை ஆள பெரும்பாலானோர் வரவில்லை.

ஒரு சிலர் முன் வந்து 5 வருடம் நாட்டை ஆண்ட பிறகு இறுதியில் அந்த மோசமான தீவுக்கு சிறப்புப் படகில் அனுப்பி வைக்கப்பட்டு கொடிய சந்துகளுக்குப் பலியானார்கள். இதனால் யாரும் அரசாள முன்வரவில்லை. ஆனாலும், ஒரு இளைஞன் துணிந்து ஆட்சிசெய்ய முன்வந்து 5 வருடங்கள் சீரும் சிறப்புமாக அரசாட்சி செய்தான். அந்த நாள்களில் மன்னரை சந்திக்கவில்லை. 5 ஆண்டுகள் முடிந்து அந்த மோசமான தீவுக்கு சிறப்பு படகில் ஏற்றப்பட்டபோது மக்கள் எல்லோரும் அழுதார்கள்.

ஆனால், அந்த அரசாட்சி செய்த இளைஞன் அழவில்லை. மன்னர் அதைக்கண்டு வியந்து கேட்டார், ''இதற்கு முன்பு இருந்த எல்லோரும் அந்த கொடிய மோசமான தீவுக்குச் செல்லும்போது அழுவார்கள். நீயோ சிரிக்கிறாய்'' என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சொன்னார், ''கடந்த 5 வருடத்தில் அந்த தீவு முழுவதையும் சீர்படுத்தி நம் நாட்டில் உள்ள உழைப்பாளிகளை அனுப்பி அங்கேயும் மாட, மாளிகைகள் கட்டி இருக்கிறேன். இனி அங்கேயும் சென்று அரசாட்சி செய்வேன்'' என்றார். அதைக் கேட்டு மன்னன் மகிழ்ச்சி அடைந்து இவன்தான் நாட்டை சீரும் சிறப்புமாக வழிநடத்துவான் என்று மன்னன் கண்டறிந்தார்.” என கதையை முடித்தார் முதல்வர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close