Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தைக் குளிர்ச்சியாக மாற்றிய மழை; மகிழ்ச்சியில் மக்கள்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடக்கம் முதல் பொய்த்துவிட்ட நிலையில், வடகிழக்குப் பருவமழை பரவலாக குமரிமாவட்டத்தில் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக சாரல் மழை பெய்துவருகிறது

கடந்த சில நாள்களாக குமரியில் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும்  மழை கணிசமான அளவு பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்ந்து வருகிறது. 

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கடல் அணையின் நீர் மட்டம் கடந்த 11 மாதங்களாக வறண்டு காணப்பட்டது. நாகர்கோவில் நகர மக்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி  அணையில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது குமரிமாவட்ட பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டுமே நீர் திறந்து விடப்படுகிறது. பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு முக்கடல்  அணையின் நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக இருந்தது. இன்னும் ஓரிரு நாள்களில் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ள போதிலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுவதால் குமரிமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close