Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியில் களைக்கட்டிய மோடியின் பிறந்தநாள் 

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா, குமரி மாவட்டத்தில் சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், சுசீந்திரம் கோயிலில் பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசு மருத்துவமனை வளாகத்தைத் 'தூய்மை  இந்தியா' என்ற மத்திய அரசின் திட்டத்தின்மூலம் தூய்மைப்படுத்தும் பணி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அங்குள்ள கூடுதல் மருத்துவமனை கட்டடப் பகுதியில் கிடந்த குப்பைகளை, பொன்.ராதாகிருஷ்ணன் அகற்றினார். இதில், குமரி மாவட்ட பா.ஜ.க-வினரும் இணைந்து குப்பைகளை அகற்றினார்கள். குப்பைகளை அகற்றும் பணி, சுமார் 1 மணி நேரம் நடந்தது. அதன்பிறகு, பா.ஜ.க. இளைஞரணியினர் 67 பேர், மோடியின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்தனர்.

அதன்பிறகு, வடசேரியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தூய்மை ரதத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த ரதம், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட்டுகள், கிராமங்கள் என எல்லாப் பகுதிகளுக்கும் சென்று, தூய்மை பற்றிய விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது. அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை தூய்மை ரதம் குமரிமாவட்டத்தை வலம் வர இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close