Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்; கொண்டாட்டத்தில் சுற்றுலாப் பயணிகள்

குமரிமாவட்ட அணைகளில், தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கோதையாற்றில்  தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் ஆனந்தக் குளியல் போட  சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிந்துவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு, திற்பரப்பு பகுதியில் அருவியாக விழுந்து செல்கிறது. குறிப்பிட்ட சீசனாக இல்லாமல், எப்போதும் தண்ணீர் கொட்டும். கோதையாற்றில், ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், தண்ணீர் குறைந்துவிட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மலையோரப் பகுதிகளில் பெய்யும் மழை, அடிக்கடி கனமழையாகக் கொட்டுகிறது. இதனால், நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கை அழகை ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். கோதையாறு, சிற்றாறுடன் இணைந்து அருவியாகப் பாய்ந்துசெல்கிறது. அருவியின் மேற்பகுதியில், 1948-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில், விவசாயத் தேவைக்காக தடுப்பணை அமைத்து இரு கால்வாய்களும் அமைத்துள்ளனர். செக்டேம் கட்டப்பட்டுள்ளதால், மேற் பகுதியில் 2 கி.மீ தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. பல வாராங்களாக  வறண்டுகிடந்த திற்பரப்பு அருவியில், தற்போது தண்ணீர் கொட்டுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இந்த அருவி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையினால் பராமரிக்கப்படுகிறது. கோதையாறு, காடுகளின் வழியாகப் பாய்ந்து வருவதால், பல மூலிகைகளின் குணம் நீரில் இருக்கிறது. கால்களில் உள்ள பித்தவெடிப்பு மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை, அருவி நீருக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள் .அதனால் மக்கள், குறைந்தது ஒரு மணி நேரமாவது திற்பரப்பு அருவியில் குளிக்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close